கடன் எப்ப தான் தீரும்! கர்ணன் பாடலை பாடி கிண்டலுக்கு ஆளான சித் ஸ்ரீராம்

sivaji karnan sidsriram viralmeme
By Edward Dec 30, 2021 07:40 AM GMT
Report

தமிழ் சினிமா உள்ளிட்ட பல மொழிகளில் இளம் வயதில் முன்னணி பாடகராக இருந்து வருபவர் சித் ஸ்ரீராம். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பின்னணி பாடகர் வரிசையில் இவர் தான் முதலிடம்.

அப்படி இருக்கையில் தன் குரலால் முன்னணி இசையமைப்பாளர்கள் பாடல்களில் பாடி நல்ல பேர் எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த இசைக்கச்சேரி ஒன்றில் பாடல்களை பாடி ஈர்த்து வந்தார்.

அப்போது நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் பட பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடியுள்ளார். இப்படியெல்லாம் பாடலாமா என்று கூறும் அளவிற்கு அவர் பாடியது இருந்துள்ளது. இதற்கு பலர் இணையத்தில் திட்டியும் மீம்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.