அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.. நிறைவேறாமல் இறந்துபோன நடிகை சில்க் ஸ்மிதா

actress dance dream silk smitha
By Kathick Jan 06, 2022 07:30 PM GMT
Report

80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. யாராலும் மறக்கவே முடியாத ஒரு நடிகை, இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தது தான் பலருக்கும் அதிர்ச்சி செய்தி. இப்போது வரை இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பவே இல்லை. ஆனால் இவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் வேறலெவலில் இருந்திருப்பார்.

இந்நிலையில் நடிகை சில்க் சுமிதாவுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்ததுள்ளதாம். அது என்னவென்றால், நடிகை சாவித்திரி போன்று குடும்ப பாங்காக நடிக்க வேண்டும் என்பது அவரின் தீராத ஆசையாக இருந்தது. சில்க்கின் அந்த ஆசையை ஓரளவுக்கு நிறைவேற்றியவர் இயக்குனர் பாரதிராஜா.

அவர் இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில், ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஒரு தைரியமான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.