முகம் மட்டுமில்ல மற்ற எல்லாமே சில்க் ஸ்மிதா போலதான்!! மார்க் ஆண்டனி சில்க் சொன்ன உண்மை...
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் மார்க் ஆண்டனி செப்டம்பர் 15ல் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல் ஒரு பெண் நடித்துள்ளார். அது வேறு யாருமில்லை அச்சு அசல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை உரித்து வைத்திருக்க்ம் விஷ்ணு பிரியா தான் அது.
ரியல் சில்க் ஸ்மிதாவை அப்படி கொண்டு வந்துள்ள விஷ்ணு பிரியா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.
சில்க் ஸ்மிதாவுக்கு தனக்கும் உள்ள ஒற்றுமையை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு பிரியா. அதாவது சில்க் ஸ்மிதாவின் சொந்த ஊர் திருப்பதி தான் தன் ஊர்.
அதிலும் சில்க் ஸ்மிதா இறந்த 1996-க்கு அடுத்த ஆண்டு 1997ல், தான் பிறந்ததாகவும் என்னுடைய பிறந்த நாள் 3 எனவும் சில்க் ஸ்மிதா பிறந்த நாள் 13 என்றும் கூறியும் சில்க் ஸ்மிதா பலமுறை தன் கணவரின் வந்துள்ளதாகவும் தெரிவித்து வியக்க வைத்துள்ளார்.