நடிகரை நம்பவைத்து காலை வாரிவிட்ட சிம்பு! கூப்பிட்டு அசிங்கபடுத்துறிங்களா.?

simbu gauthamkarthik pathuthala
By Edward Feb 23, 2022 03:30 AM GMT
Report

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் மூலம் தான் விட்ட இடத்தினை பிடித்து கம்பேக் கொடுத்துள்ளார். இப்படத்திற்கு பிறகு பழைய சிம்புவாக இல்லாமல் எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதை தீர யோசித்து ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறார்.

அப்படி இயக்குனர் நரதன் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தினை நம்பி பெரிய கனவையே வைத்திருக்கிறார் சிம்பு. முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் கசிந்தது.

முதலில் கெளதம் கார்த்திக்கிடம் கதை கூறியபோது கெஸ்ட் ரோல் தான் என்று கூறியுள்ளார்களாம். அதன்பின் நீங்கள் தான் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று கூறி ஷாக் கொடுத்தார்களாம். இதுகுறித்து முன்கூட்டிய சொல்லி இருக்கலாமே என்று கூறியதோடு,

கால்ஷீட்டினை இதற்காக ஒதுக்கவில்லையே என்று பயங்கர கோபத்தில் புலம்பி இருக்கிறார் கெளதம் கார்த்திக். இதனால் கைவசம் வைத்திருந்த படம் கைநழுவி விட்டதாம். எங்கே இனிபோவது என்று நினைத்து பத்து தல படத்தையே நம்பி இருக்கிறாராம் கெளதம் கார்த்திக்.