லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இல்லை! இப்போ டாக்டர் சிம்பு..
தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து பல சர்ச்சைகள் பிரச்சனைகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்தவர் சிம்பு. ஆரம்பத்தில் நடிகைகளுடன் காதல், நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடிப்பு என பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பின் பல படங்கள் தோல்வியில் அமைந்ததால் இயக்குனர்கள் பலர் ஒதுக்கி வந்தனர். அதையெல்லாம் தூக்கிப்போட்டு ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்து கம்பேக் நடிகராக திகழ்கிறார்.
இந்நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இப்பட்டத்திற்கு சம்பந்தம் இல்லையாம்.
நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வருவதாலும் பல போராட்டங்களில் தைரியமாக கலந்து கொண்டு கருத்துக்களை கூறியதற்காக என்று வேல்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.. இனிமேல் லிட்டில் சூப்பர் ஸ்டார் கிடையாது, டாக்டர் சிம்பு என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.