மாநாடு மட்டும் தான் ஹிட்.. உடனே சம்பளத்தை அதிரடியாக ஏற்றிய சிம்பு! எவ்ளோ தெரியுமா?

STR Simbu Salary Maanaadu
By Parthiban.A Jan 21, 2022 05:30 AM GMT
Report

சிம்பு என்றாலே வம்பு என்கிற காலம் போய் தற்போது சிம்பு தான் உண்டு தன் வேலை உண்டு என படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தை தயாரித்து வரும் ஐசரி கணேஷ் நடத்தும் பல்கலைக்கழகம் சிம்புவுக்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் கொடுத்ததும் கடும் விமர்சனத்திற்க்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் தற்போது சிம்பு தனது அடுத்த படங்களுக்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டார் என செய்தி வெளியாகி இருக்கிறது. இதுவரை சிங்கிள் டிஜிட் கோடிகளில் சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது அதை டபுள் டிஜிட் கோடிகளாக மாற்றி இருக்கிறார். ஒரே படத்தில் அதிரடியாக இவ்ளோ ஏற்றிவிட்டாரே என அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

சிம்பு அடுத்து 'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி சேர்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.