காதல் இன்னும் மனசுக்குள்ள இருக்கோ? நயன் - சிம்புவை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள்..

simbu nayantara tamilactor VendhuThanindhathuKaadu
By Edward Aug 07, 2021 02:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தந்தை படத்தில் அறிமுகமாகி சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிம்பு. சில காலங்களாக சர்ச்சையில் சிக்கியும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், நயன் தாராவுடன் காதல் தோல்வியால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் கூறப்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அவரது 47 படமான வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் டைட்டிலை 12.15 மணியளவில் வெளியிட்டனர் படக்குழு. மிகவும் ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் மாறிய சிம்புவை வாழ்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று வெளியான பர்ஸ்ட்லுக் வெளியீட்டின் அறிவுப்பு போஸ்டரில் 12.15 என்று குறிப்பிட்டு வெளியான டைமிங்கையும் பார்த்த ரசிகர்கள் ஒரு விஷயத்தினை பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள். 12.15 - 1+2+1+5 = 9 என்று கூட்டி பார்த்த ரசிகர்கள் நயன் தாராவை குறிக்கிறதா என்றும் அவரை இன்னும் மறக்கவில்லையா என்று கலாய்த்து வருகிறார்கள்.

காதல் இன்னும் மனசுக்குள்ள இருக்கோ? நயன் - சிம்புவை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள்.. | Simbu Love Always Nayanthara Trending New Poster