ஆமா தலைவரே! நல்லவேல என் பொண்ணாட்டி தப்பிச்சிட்டா!
வல்லவன், மன்மதன், வாலு, இது நம்ம ஆலு போன்ற படங்களில் நடித்த சிம்பு அப்படத்தின் போது நடித்த நடிகைகளுடன் காதலிலிருந்து பின் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து சினிமாவில் சற்று ஒதுக்கி பிரச்சனைகளை கொடுத்துவந்தது. இதனால் படவாய்ப்புகளும் சரியாக அமையாமல் இருந்தது.
சமீபத்தில் மாநாடு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நல்ல பேர் வாங்கிய சிம்பு திடீரென அவரது வீட்டில் ஈஸ்வரன் பட தெலுங்கு நடிகை நித்தி அகர்வாலுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.
நடிகை சிம்புவின் வீட்டில் இருப்பதாகவும் அவர் கால்ஷீட்டினை அந்த நடிகை தான் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த நெட்டிசன்கள் மீண்டும் சிம்புவின் காதலை மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகிறார்கள்.
அதில் சிம்புவின் முன்னாள் காதலியின் தற்போதைய காதலரை வைத்து ட்ரோல் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.