46 வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட சிம்பு பட இயக்குனர்.. நாயகி போல் இருக்கும் மனைவி

Silambarasan Marriage Tamil Directors
By Bhavya Nov 12, 2024 05:37 AM GMT
Report

 2-வது திருமணம் 

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கிருஷ் ஜகர்லாமுடி. சிம்பு நடிப்பில் வெளியான 'வானம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

தற்போது அனுஷ்காவை வைத்து 'காட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், 46 வயதான கிருஷ் இரண்டாவதாக பிரீத்தி சல்லா என்ற பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

46 வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட சிம்பு பட இயக்குனர்.. நாயகி போல் இருக்கும் மனைவி | Simbu Movie Director 2 Marriage

ஹைதராபாத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று 11 வயதில் ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ் ஜகர்லாமுடி

இயக்குனர் கிருஷ் ஜகர்லாமுடி ஏற்கனவே ரம்யா என்கிற மருத்துவரை 2016 - ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர்.

46 வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட சிம்பு பட இயக்குனர்.. நாயகி போல் இருக்கும் மனைவி | Simbu Movie Director 2 Marriage

விவாகரத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இயக்குனர் கிருஷ் தற்போது ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திருமணம் நடந்து முடிந்த நிலையில், வரும் 16 - ம் தேதி இந்த ஜோடிக்கு திருமண வரவேற்பு விழா நடக்க உள்ளது.