சிம்புவுக்கு இதுதேவை தானா? மாநாடு பட வெற்றி விழாவிற்கு ஆளக்காணோமே...

simbu venkatprabhu maanaadu sureshkamatchi sachandrasekar sjsuriah
By Edward Dec 22, 2021 12:30 PM GMT
Report

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்பாவின் படங்களில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்து வந்தவர் நடிகர் சிம்பு. ஆரம்பகாலத்தில் லேட்டாக வருவார்க் தன் இஷ்டபடி இருப்பார் என்று பல விமர்சனங்களை சந்தித்து ஒதுக்கப்பட்டு வந்தார்.

அவர் நடித்து கடைசியா ஹிட் கொடுத்த படம் என்றா வின்னைத்தாண்டி வருவாயா தான். அதன்பின் எந்த படமும் வெற்றியை காணவில்லை. அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது வெங்கட் பிரபுவின் மாநாடு படம். டைம் லூப் கதையை மையமாக எடுத்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

இப்படம் 100 கோடி வசூலை எட்டிய நிலையில் சமீபத்தில் வெற்றி விழா வைத்து கொண்டாடினர் மாநாடு குழு. அந்நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்பு வரமால் இருந்துள்ளார். அதற்கு காரணம் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியாத காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் மாநாடு வசூல் 108 கோடி என்று போஸ்டர் வெளியிடும் படி சிம்பு கேட்டதாகவும் அதை செய்யாததால் தான் சிம்பு வரமல் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் சிம்பு பற்றி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியது வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு வெற்றி விழாவிற்கு வந்திருக்க வேண்டும். வெற்றி வந்தவுடன் இப்படி நடந்துகொள்ள கூடாது என்றும் தயாரிப்பாளர் உன்னை நம்பி எவ்வளவு முதலீடு செய்துள்ளார். நீ வராமல் இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது என்று கூறப்பட்டது.

Gallery