நயன் செண்டிமெண்ட்டை விடாமல் தூக்கி நிறுத்தும் நடிகர் சிம்பு!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Silambarasan Nayanthara
By Edward Jan 31, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது STR என்ற பெயரோடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன் தாராவை காதலித்து வந்த சிம்பு சில கருத்து வேறுபாடு காரணமாக நயன் தாராவை பிரிந்தார்.

அதன்பின் சிம்புவின் மார்க்கெட் இறங்க ஆரம்பித்து ஆன்மீகத்திற்கு சென்றுவிட்டார். தன்னுடைய இடத்தினை மீண்டும் பிடிக்க கடினமாக ஒர்க்கவுட் செய்து உடல் எடையை குறைத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற ஹிட் படங்களை கொடுத்தது.

இதன்பின் நடிகர் சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 5.04 மணியளவில் வெளியாகும் என்று நேற்று மாலை 5.04 மணிக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 5+4 என்று கணக்கிட்டால் 9 வருகிறது என்று கூறி, நயன் செண்ட்டிமெண்ட்டை இன்னும் விடவில்லையா சிம்பு என்று பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery