காய்ச்சலால் மருத்துவமனையில் கமல் ஹாசன்! பிக்பாஸ் தொகுப்பாளராக அவருக்கு பதில் இவரா?

Kamal Haasan Silambarasan Bigg Boss Ramya Pandian
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய்யின் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 40 நாட்களுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

காய்ச்சலால் மருத்துவமனையில் கமல் ஹாசன்! பிக்பாஸ் தொகுப்பாளராக அவருக்கு பதில் இவரா? | Simbu Ramya Krishnan Who Replace Host Biggboss6

ஏற்கனவே ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டவர்கள் வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரம் யார் கமல் ஹாசனால் எலிமினேட் செய்யப்படவுள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை கமல் ஹாசன் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதில், குணமடைந்து வருகிறார் என்று ஓரிரு நாட்களில் வீடு திரும்பிடுவார் என்று கூறியிருந்தனர்.

அப்படி இரு நாட்கள் கமல் ஹாசன் வீடு திரும்பினாலும் வரும் சனிக்கிழமை அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே பிக்பாஸ் 5 சீசனின் போது கமல் ஹாசனுக்கு கோவிட் 19 வந்ததால் அவருக்கு பதில் இரு நாட்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

காய்ச்சலால் மருத்துவமனையில் கமல் ஹாசன்! பிக்பாஸ் தொகுப்பாளராக அவருக்கு பதில் இவரா? | Simbu Ramya Krishnan Who Replace Host Biggboss6

அதேபோல் வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று பிக்பாஸ் சீசன் 6-ஐ ரம்யா கிருஷ்ணனோ அல்லது நடிகர் சிம்புவோ தொகுத்து வழங்கலாம் என்றும் தெரியவருகிறது.

ஆனால் ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஷூட்டிங்கிலும் சிம்பு பத்து தல படத்தின் ஷூட்டிங்கிலும் இருந்து வருகிறார்கள். இதில் சிம்பு சமீபத்தில் பத்து தல படத்தினை முடித்ததாக கூறியிருந்தார்.

இரு பாடல் காட்சிகள் மட்டுமே ஷூட் செய்யவுள்ளதால் அதிகப்பட்சமாக சிம்பு நிகழ்ச்சியை தொகுக்க விஜய் தொலைக்காட்சி கூப்பிடலாம்.

காய்ச்சலால் மருத்துவமனையில் கமல் ஹாசன்! பிக்பாஸ் தொகுப்பாளராக அவருக்கு பதில் இவரா? | Simbu Ramya Krishnan Who Replace Host Biggboss6

Gallery