அடேங்கப்பா! சிம்பு இத்தனை கோடி சம்பளம் கேட்கிறாரா! தயாரிப்பாளர்கள் ஷாக்
முன்னணி தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான சிம்புவின் தற்போதைய சம்பளம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துள்ள நிலையிலும், அதற்கு முன் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 50 கோடி வரை சம்பளம் கேட்பதாக பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிம்பு கேட்கும் சம்பளம், தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் படுவைரலாக பேசப்பட்டு வருகிறது.