கமலுக்கு அடுத்ததாக சகலகலா வல்லவன் இந்த நடிகர் தான்! பிரபல நடிகர்..

controversy simbu str tamilactress
By Edward Sep 05, 2021 06:22 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் வெளியாக காதல் தோல்வி படம் என்றால் இதுதான் என்று பேர் கொடுத்து வெளியான படம் ஒருதலை ராகம். இயக்குநர் டி. ராஜேந்திரன் இயக்கத்தில் பெரிய ஹிட் கொடுத்தது இப்படம். இதையடுத்து அடுத்தடுத்த படங்களை இயக்கினார்.

அவருக்கு அடுத்ததாக் தனது மகன் சிம்புவை நடிகராக்க்கினார். 5 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் எஸ் டி ஆர் என்ற பெயர் பெற்று வருபவர். படங்களில் நடித்து பிரபலமானதைவிட சர்ச்சைகளில் சிக்கி பேசப்படும் நடிகராக திகழ்ந்தவர்.

அந்தவகையில், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சிம்பு பற்றிய உண்மைகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டி ராஜேந்திரன் மட்டும் தான் நட்சத்திரங்களில் சர்ச்சையில் சிக்காதவர். பல நடிகைகளை அறிமுகப்படுத்தினாலும் சர்ச்சையில் சிக்காமல் இருப்பார். ஆனால் அவர் மகன் சிம்பு சிக்காத இடமே கிடையாது என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், சிம்பு காதலித்த நடிகைகளை விட சிம்புவை காதலிக்காத நடிகைகளே கிடையாது. கமலுக்கு அடுத்ததாக சகலகலா வல்லவன் என்ற பெயரை எடுத்தவர் சிம்புதான். அவருடைய நடவடிக்கை குழந்தை நட்சத்திரமாக இருப்பார். திரிஷா, நயன் தாரா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.