மாநாடு சக்ஸஸ் மீட்டில் திட்டிய எஸ்ஏசி.. சிம்பு எடுத்த அதிரடி முடிவு
நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் பெரிய ஹிட் ஆனது உங்களுக்கு தெரிந்தது தான். அதன் சக்ஸஸ் மீட் சில தினங்களுக்கு முன்பு நடந்தபோது அதற்கு சிம்பு வரவே இல்லை.
அவர் பாண்டிச்சேரியில் கௌதம் மேனன் பட ஷூட்டிங்கில் இருந்ததால் வரவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு டிஆருக்கும் இருக்கும் பிரச்சனை காரணமாக தான் சிம்பு வரவில்லை என கோடம்பாக்கத்தினர் கிசுகிசுத்தனர்.
இந்நிலையில் தற்போது சிம்பு தனியாக ரசிகர்களை சந்தித்து பேசப்போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ஒரு போட்டோ உடன் தான் இந்த தகவல் வந்திருக்கிறது.
"அகில இந்திய சிலம்பரசன் T.R. ரசிகர் மன்ற தலைவர் T.வாசு நடிகர் சிலம்பரசன் T.R அவர்களிடம் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார்.விரைவில் நடிகர் சிலம்பரசன் T.R ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என பிஆர்ஓ ட்விட் செய்திருக்கிறார்.
அகில இந்திய சிலம்பரசன் T.R. ரசிகர் மன்ற தலைவர் T.வாசு நடிகர் சிலம்பரசன் T.R அவர்களிடம் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார்.
— Diamond Babu (@idiamondbabu) December 24, 2021
விரைவில் நடிகர் சிலம்பரசன் T.R ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். pic.twitter.com/Oy621Hfh90