மீண்டும் காதலிக்க தயாராகும் சிம்பு - திரிஷா.. ரெடியான குட் நியூஸ்
Silambarasan
Trisha
By Kathick
சிம்பு - திரிஷா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் சிம்பு - திரிஷாவின் ஜோடியும் ஒன்று. தமிழ் சினிமாவில் அதிகமாக திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகள் திரிஷா - சிம்பு.
இவர்கள் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் விண்னைத்தாண்டி வருவாயா. இப்படம் தான் சிம்பு - திரிஷா இருவரையும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் ரசிக்கவைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகும். ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாது.
இந்நிலையில், தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இப்படத்தின் மூலம் மீண்டும் சிம்பு - திரிஷா ஆன் ஸ்க்ரீன் ஜோடிகளாக ரொமான்ஸ் செய்ய உள்ளார்களாம்.