ஐய்யோ மீண்டும் மீண்டுமா?? மாநாடு நோ ரிலீஸால் அதிர்ச்சியில் நடிகர் சிம்பு ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களம் கண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சிம்பு. பல காதல் சர்ச்சைக்கு பின்னும் பல பிரச்சனையில் சிக்கி சினிமாவில் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்டார் சிம்பு.

இதனையடுத்து மீண்டும் தன் இடத்தை பிடிக்க இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்தார். அதன் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்று சிம்பு அழுதும் பேசினார்.

படம் நவம்பர் 25க்கு வெளியாக இருக்க படக்குழு முடிவெடுத்த நிலையில் தற்போது சில காரணங்களால் படம் வெளியாகவில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளனர். படம் எப்போது வெளியாகும் என்று தெரிவிக்கப்படவில்லை.

அதற்கான காரணம், சிலர் கொடுக்கும் பிரச்சனையாக இருக்கும் என்றும் சேட்டிலைட் ரைட்ஸ் இன்னும் விலைக்கு போகவில்லை என்றும் கூறப்படுகிறது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்