விஷாலுக்கும் சிம்புவிற்கும் என்ன பிரச்சனை! கடும் வேதனையில் கதறிய எஸ் டி ஆரின் தாயார்..

simbu vishal usharajendar venthuhtaninthatukaadu
By Edward Aug 13, 2021 12:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் தந்தையின் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பின் தன் மார்க்கெட்டை பிடிக்க அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் அதிகாரபூர்வ டைட்டிலை போஸ்டரோடு வெளியிட்டு வைரலானது.

இந்நிலையில் பெஃப்ஸி சிம்புவிற்கு ரெட் கார்ட் கொடுத்து படங்களில் நடிக்க முடியாதபடி தலைவர் செல்வமணி பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு சிம்புவின் தாயார் உஷா ரஜேந்தர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தோல்வி அடைந்தது ஒன்று. அப்படத்தில் சிம்புவின் சம்பளமாக 3.5 கோடி ரூபாய் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடன் பேசியுள்ளார்.

படத்தை குறித்த நேரத்திலும் முடித்து கொடுத்தும் சம்பளத்தை கொடுக்காமலும் படத்தை வெளியிடாமலும் இருந்துள்ளார் தயாரிப்பாளர். இதனால் நடிகர் சங்கத்தில் சிம்பு புகாரளித்திருந்தார். பின் கொடுத்த சம்பளத்திற்கு ஜிஎஸ்டியும் கட்டல டிடிஎஸ்சும் கட்டல என்று கூறியுள்ளார் சிம்பு தாயார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் சிம்பு ஒரு படத்தினை மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளம் இல்லாமல் பண்ணித்தர வேண்டும் அல்லது வேறொருவரின் படத்தில் நடிக்கும் போது 2 கோடி 40 லட்ச ரூபாய் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை போட்டுள்ளார். விஷால் என்ன சுப்ரீம் கோர்ட் ஜர்ஜா, இதற்கு அப்பீலே கிடையாதா என்ரு ஆதங்கமாக பேசியிருந்தார்.

விஷால் தயாரிப்பாளர் ட்ரஸ்சில் இருந்து 7 கோடி ரூபாயை பல விதத்துல விரயம் பண்ணீவிட்டார். அதற்கு கணக்கு காட்டாம இருந்த விஷாலுக்கு ரெட் கார்ட் இல்ல சிம்புவிற்கு ரெட் கார்ட்டா என்று ஆதங்கமாக பேசியுள்ளார். இதுகுறித்து முன்பே பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி எல்லாத்துக்கும் சிம்பு தான் காரணம் என்று ஆவேசமாக கூறியதோடு அவர் வெளியிட்ட வெந்து தணிந்தது காடு படத்தை கேலி செய்தும் பேட்டி கொடுத்துள்ளார்.

குறித்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க...