ரெண்டு குழந்தைகளுடன் நடுரோட்டில் நின்ற சிம்ரன்!! தயாரிப்பாளர் கொடுத்த ஷாக்
Simran
Gossip Today
Kalaippuli S Thanu
Tamil Actress
By Edward
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சிம்ரன் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிம்ரன் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், சில ஆண்டுகளுக்கு முன் சிம்ரன் லண்டனில் ஒரு ஹோட்டலில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
திடீரென அந்த ஹோட்டல் நிர்வாகம் சிம்ரன் தங்கியிருக்க வேண்டிய காலக்கெடு முடிந்துவிட்டதாக கூறி ஹோட்டலை விட்டு காலி செய்ய கூறியிருக்கிறார்கள்.
ஹோட்டலில் இருந்து வெளியேறிய சிம்ரன் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு கால் செய்தார். உடனே நானும் தன்னுடைய நண்பர்கள் மூலம் சிம்ரனுக்கு தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்ததாக விருதுவிழாவில் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார் கலைப்புலி தாணு.