மீண்டும் நிற்கும் பழனியின் திருமணம்.. அடுத்து காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் பாப்புலர் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் சில வாரங்களுக்கு முன்பு தான் பழனியின் நிச்சயதார்த்தம் நின்றுபோனது.
அதற்கு காரணம் பழனியின் சொந்த அண்ணன்களே. அவர்கள் பெண் வீட்டில் சொல்லி திருமணத்தை நிறுத்தி இருப்பார்கள். இந்நிலையில் பழனிக்கு மீண்டும் திருமணம் ஏற்பாடு ஆகும் நிலையில், அந்த திருமணமும் நின்றுவிடுகிறது.
பெண் வீட்டார் சென்றுவிடும் நிலையில் பழனியின் வில்லன் அண்ணன்கள் வேறொரு பெண்ணை காட்டுகின்றனர். இந்த பெண் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். சரி என்று சொன்னால் இங்கேயே திருமணத்தை நடத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
தன் முன்னிலையில் தான் பழனியின் திருமணம் நடக்க வேண்டும் என்று இதுபோன்று ஒரு விஷயத்தை பழனியின் அண்ணன்கள் செய்து வருகின்றனர்.
இதற்கு பழனி என்ன முடிவு எடுக்க போகிறார், அவரது அண்ணன்கள் செய்த சதியில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறார் என்பது மிகப் பெரிய டுவிஸ்டாக இருக்க போகிறது.