சிங்கம் சூர்யா மாதிரி பிடிச்சிருக்காங்க.. கடலில் சிக்கிய போதைபொருள் கடத்தல் காரர்கள்

Suriya Mexico
By Edward Aug 05, 2022 06:00 AM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் 2010ல் வெலியான படம் சிங்கம். ஹரி இயக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் போதைபொருள் விவகாரம் குறித்து சிங்கம் 2 படத்தினை நடிகர் சூர்யாவை வைத்து எடுத்து வெளியிட்டார்.

அப்படத்தில் கடத்தர் காரர்களை கடலில் சென்றும் வெளிநாட்டில் பதுங்கியும் இருப்பார்கள். அவர்களை சூர்யா துறத்தி பிடிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். அப்படி ஒரு சம்பவம் மெக்சிகோ கடற்படை செய்திருக்கிறது.

மைக்கோகன் மாநிலத்தில் உள்ள கடலில், படகில் தப்ப முயன்றுள்ள போதைபொருள் கடத்தல் காரர்களை ஹெலிகாப்டர்கள், போட் மூலம் விரட்டி பிடித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரத்து 600 கிலோ எடையிலான கொகெயின் மற்றும் கடத்தல் எரிபொருட்களை கைப்பற்றியுள்ளனர் மெக்சிகோ கடற்படையினர்.