அந்த படத்துக்கு அப்றம் வீட்டை விட்டே வெளியே வர முடியல, சிங்கம்புலி நடிகையின் கண்ணீர்

Actress
By Tony May 18, 2026 08:30 AM GMT
Report

ஜீவா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு பெற்ற படம் சிங்கம்புலி. இந்த படத்தில் இரண்டு ஜீவா இருப்பார்கள். அதில் ஒரு ஜீவா வில்லனாக நடித்திருப்பார், அதோடு பெண்களை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதில் வில்லன் ஜீவா ஒரு காட்சியில் ஒரு பெண் மட்டுமின்றி அவருடைய அம்மாவையும் ஏமாற்றுவது போல் காட்சி இருக்கும், அந்த காட்சியில் நடித்த அம்மா நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் ஏன் அந்த படத்தில் அந்த காட்சியில் நடித்தேன் என புரியவில்லை.

அந்த படத்துக்கு அப்றம் வீட்டை விட்டே வெளியே வர முடியல, சிங்கம்புலி நடிகையின் கண்ணீர் | Singampuli Movie Actress Sad For Acting The Scene

ஏனெனில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை, அப்போது காட்சி எடுத்தபோது எதோ சொல்லி எடுத்தார்கள், ஆனால், படத்தில் அது வேறு விதமாக வந்தது. அந்த காட்சி வந்ததும் குடும்பத்தில் எல்லோரும் என்னை திட்ட, என்னால் அதன் பிறகு நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை, அடுத்து நடிக்கலாமா வேண்டாமா என்ற நிலை உருவாகியது.

இந்த காட்சியால் மிகப்பெரிய மன உளைச்சல் எனக்கு ஏற்பட்டது என அவர் கூறியது தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.