சாக்கடை குப்பைகள்! கர்ப்பமானதை மறைக்க இதுதான் காரணம்.. பிரபல பாடகி

Vairamuthu Chinmayi
By Edward Jun 25, 2022 09:03 AM GMT
Report
270 Shares

பிரபல பாடகியாக விளங்கி வரும் பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்ததை புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டார். இதற்கு பல நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இரட்டை குழந்தை

இதற்கு ஒருசில சமுகவலைத்தளத்தில் சின்மயி கர்ப்பமாகி குழந்தை பெற்றதை படுகேவளமாக விமர்சித்தும் வந்தனர். அதில் சிலர் வைரம் முத்து போல இன்று போல் என்றும் புகழோடு வாழ்க வளமுடன் என்ற கருத்தினை ஒரு நபர் கூறியிருந்தார். இதற்கு கடுமையான கோபத்தில் சின்மயி ரீப்பிளே செய்துள்ளார். உன்னெல்லாம் பெத்தாங்க பாரு அவங்கள சொல்லனும் என்று கூறியிருந்தார்.

சாக்கடை குப்பைகள்! கர்ப்பமானதை மறைக்க இதுதான் காரணம்.. பிரபல பாடகி | Singer Chinmayi Angry Reply Netizens Bad Comments

கடும்கோபத்தை ஏற்படுத்திய நெட்டிசன்கள்

அதற்கும் சிலர் வைரம் மற்றும் முத்து சொன்னது அக்கா வைரமுத்து நினைச்சிட்டாஙக போல எப்போ பாரு அதே நினைப்பு என்று மற்றொருவர் கூறியுள்ளார். அதற்கும் பதிலளித்த சின்மயி, அவர போலவே உங்க வீட்ல பிள்ளைகள் பிறக்கட்டும். அவர் நினைப்பாவே இருக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கர்ப்பதை அறிவிக்காத காரணம்

மேலும், தான் கர்ப்பமாகி இருந்ததை ஏன் வெளியில் கூறாததற்கு காரணத்தையும் தெரிவித்துள்ளார். எனக்கு குழந்தை பிறந்ததை நான் அறிவித்தவுடன் நெட்டிசன்கள் பலர் நான் மீடுவில் குறிப்பிட்டிந்த நபருடன் என் குழந்தையை தொடர்புபடுத்தி பேசி வந்தனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் பெண்ணியம் பேசுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இணையத்தில் அதிக சாக்கடை குப்பைகள் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான் என்று கூறிப்பிட்டார். அதனால் தான் கர்ப்பமாக இருந்ததை எங்கும் கூறாமல் இருந்தேன் என்று கூறியுள்ளார்.