பெண்கள் யாரும் கன்னித்தன்மையோடு இல்லையா? மோசமான கேள்விக்கு பதிலடி கொடுத்த பாடகி சின்மயி..
பின்னணி பாடகியாக இருந்து தற்போது மீடூ பிரச்சனைகள் குறித்து தைரியமாக இணையத்தில் கருத்துக்களை எடுத்து வைத்து வருபவர் தான் பாடகி சின்மயி.
சமீபத்தில் ஒரு நபர், இந்தியாவில் திருமணம் செய்ய கன்னிப்பெண்களெ இல்லை என்று ஒரு பதிவினை போட்டிருந்தார். இணையவாசியின் இந்த பதிவால் கடுப்பாகிய பாடகி சின்மயி, அதற்கு பதிலடி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
பாடகி சின்மயி
பிளிங்க் இட் CEO, சோசியல் மீடியா பக்கத்தில் 1.2 லட்சம் காண்டம் ஒரே இரவில் டெலிவரி செய்யப்பட்டதாக ஒரு பதிவினை போட்டுள்ளார். ஒரே இரவில் அந்த தளத்தில் மட்டுமே இவ்வளவு விற்பனை செய்யப்பட்டது என்றால் இ காமர்ஸ் தளத்தில் எத்தனை லட்சம் விற்பனை நடந்திருக்கும்.
இந்த காலத்து ஆண்டுகள் கன்னித்தன்மை குறையாத பெண்களை கண்டுபிடித்து திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.
அதனை டேக் செய்த சின்மயி, “அப்படி நினைக்கும் ஆண்கள் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது, ஆண்கள், ஆடுகள், நாய்கள் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இணையவாசி ஒருவர்
சின்மயி பதிவு ட்ரெண்ட்டானதை தொடர்ந்து இணையவாசி ஒருவர், ’ஆண்கள் மட்டுமில்லை பெண்கள் அதை செய்யக்கூடாது என்று கூறி சின்மையியை கோமாளி என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.
இதனை பார்த்த சின்மயி, பெண்கள் கன்னித்தன்மை மீது ஆர்வம் கொண்டவர்கள் இல்லை, ஆண்கள் அந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக இருந்ததாக பெண்கள் நினைக்கிறார்கள்.
நீங்கள் அனைவரும் பாதுகாப்பான உறவு கொண்டீர்களா? என்று கேட்க கூட உங்களுக்கு தைரியமில்லை, பாலியல் விருப்பம் இல்லாதவர்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டவுடன் நிரந்தரமாக அவர்களை மாசுப்படுத்திவிட்டதாக நினைக்கிறீர்கள், இது ஆண்களுக்கு இருக்கும் ஒருவித நோய் என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.
இதற்கு பலவிதமான எதிர்ப்பு வந்தாலும் சில சின்மயிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி பதிவிட்டு வருகிறார்கள்.