மரணமடைந்த மகள்! 10 ஆண்டுகள் பிரிந்ததை நினைவு கூறும் சின்னக்குயில் சித்ரா..

chithra daughter singer tamilsinger chinnakuyilchithra
By Edward Dec 19, 2021 10:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பல மொழிகளில் பாடி அசத்தி வருபவர் பாடகி சித்ரா. சின்னக்குயில் என்ற பெயருக்கு பெயர் போன சித்ரா தற்போது சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றியும் சில பாடல்களை பாடியும் வருகிறார்.

ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நந்தனா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த சித்ரா 2011ல் தனது மகளை இழந்து வாடினார். தற்போது மகள் இறந்து 10 வருடமாகிய நிலையில் அவரது பிறந்த நாளை நினைவு கூறும் வண்ணம் நந்தனாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களால் தனக்கு பல குழந்தைகள் கிடைத்துள்ளனர், அவர்கள் எனக்காக வேண்டுதல் செய்கின்றனர். கடவுள் ஒரு குழ்நதையை எடுத்து 100 குழந்தைகளை கொடுத்துள்ளார் என்று பெருமையுடன் சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.