நான் கர்ப்பமா இருக்கேனா? ரவியுடன் இந்த ரிலேஷன்ஷிப் தான்!! பாடகி கெனிஷா ஓபன் டாக்..
பாடகி கெனிஷா
கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் நடிகர் பெயராக இருப்பது ரவி மோகன். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போகிறேன் என்ற அறிக்கை வெளியிட்டது முதல் தற்போது வரை அவரின் விஷயங்கள் இணையத்தில் விவாதபொருளாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷின் மகள் திருமணத்தின் போது, தன்னுடைய கிசுகிசுக்கப்படும் கெனிஷாவுடன் ஜோடியாக கைக்கோர்த்தபடி ரவி மோகன் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆர்த்தி, விவாகரத்து வழக்கில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்ற கோரிக்கையை கேட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பின் கெனிஷா முதன்முதலாக அளித்த பேட்டியொன்றில் தான் கர்ப்பமாக இருப்பது குறித்து செய்திகள் வெளியானது பற்றி பகிர்ந்துள்ளார்.
கர்ப்பமா இருக்கேனா
அதில், என்னை பற்றியும் என் அப்பா, அம்மா பற்றியும் பலரும் பலவிதமாக பேசுகிறீர்கள். நீங்கள் உங்களுக்கு வாய் இருக்கிறது என்பதால் பேசுகிறீர்கள். அது நாளைக்கு உங்களுக்கு திரும்ப கிடைக்கும், கர்மா சும்மா விடாது.
நானும் ரவி சாரும் ஒருசில தொழில்களில் இணைந்து செயல்பட்டு வருகிறோம், அந்த ரிலேஷன்ஷிப் தான். நான் ஹீலர் கிடையாது, Spiritual healer தான். என்ன தொழில் செய்யப்போகிறோம் என்று ஜூன் 16க்கு பின் இருவரும் அதை தெரிவிப்போம்.
நான் கர்ப்பமா இருக்கிறேன் என்று கூட பலரும் கூறுகிறார்கள். எனக்கு சிக்ஸ் பேக் இல்லை என்றாலும் நல்ல பேக்ஸ் தான் இருக்கிறது. நான் ஒன்றும் கர்ப்பம் இல்லை. யார் என்ன பேசினாலும் அது அவர்களுக்கே திரும்ப வரும்.
எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரிய வரும். அதுவரையில் எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கெனிஷா.