LIVE கான்செட்டில் உடம்புமீது தண்ணீர் ஊற்றி ஆட்டம் போட்ட பிரபல பாடகி!! வெளுத்து வாங்கும் நெட்டீசன்ஸ்..

Viral Video Tamil Singers Actress
By Edward Dec 07, 2025 06:50 AM GMT
Report

நேஹா கக்கர்

பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் தளங்களில் அவரது மேடை நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் பரவத் தொடங்கியிருக்கிறது.

அதாவது, பிரம்மாண்ட லைவ் கச்சேரியின்போது நடைபெற்ற சம்பவம் தான் அது. அதில், பாடகி நேஹா, சிறுத்தை தோல் வடிவ ஆடையணிந்து அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்தார்.

LIVE கான்செட்டில் உடம்புமீது தண்ணீர் ஊற்றி ஆட்டம் போட்ட பிரபல பாடகி!! வெளுத்து வாங்கும் நெட்டீசன்ஸ்.. | Singer Neha Kakkar Gets Slammed By Netizens

தண்ணீர் ஊற்றி ஆட்டம்

திடீரென ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து தன்னுடைய உடலின் மேல்பகுதியில் ஊற்றியிருக்கிறார். ஒரு கையை உயர்த்தியபடி அவர் கிளாமராக நடனமாடியதை கவனித்த நெட்டிசன்கள், கோபத்தில் கண்டித்து வருகிறார்கள்.

நேஹாவின் நடன அசைவுகளை அநாகரிகமானது என்றும் அளவுக்கு மீறியது என்றும் முத்திரை குத்தி விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலர் சிறந்த பாடகி என்ற அவரது மரியாதையை அவர் கெடுத்துக்கொண்டார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.