41 வயதில் பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் ஸ்ரேயா கோஷல்.. அடேங்கப்பா!
ஸ்ரேயா கோஷல்
இந்தியாவில் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்டவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் சினிமா பாடல்கள் பாடுவதை தாண்டி இசைக் கச்சேரிகளில் அதிகம் பாடி வருகிறார். தனது 16 வயதில் சரிகமபா நிகழ்ச்சியில் கலந்துகெண்டு வெற்றியாளரானார்.
தனது திறமையால் முன்னேறி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.
தமிழில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் 5 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரியாகவும் உள்ளார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயா கோஷல் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரு பாடலுக்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நடிகை ஷ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு ரூ. 185 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.