நெருக்கமான ஒருவரின் மரணம்!! குக் வித் கோமாளி சிவாங்கியின் எமோஷ்னல்..
சூப்பர் சிங்கர் சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார்.
தற்போது தனக்கு நெருக்கமான ஒரு நபர் தற்கொலை செய்து மரணமடைந்தது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். ராகுல் ரகுபதி என்பவர் என்னுடைய போட்டோகிராஃபர். குக் வித் கோமாளியில் இருக்கும் போதும் சரி, என்னொட எல்லா புகைப்படத்தையும் அவர் தான் எடுத்தார்.
திடீரென அவர் மரணமடைந்தது எனக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. நல்லா தான் பேசிட்டு இருந்தார். நான் சிங்கப்பூருக்கு போவதற்கு முன் கொஞ்சம் சரியாகவே இல்லாமல் இருந்தார்.
அதன்பின் சிங்கபூரில் நான் இருக்கும் போது இந்த செய்தி தெரிந்தது, ஏன் எல்லோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது என சிவாங்கி தெரிவித்துள்ளார்.