என் சோல் மேட் இவர், யாருக்கும் கொடுக்கமாட்டேன்.. பாடகி கெனிஷா பரபரப்பு பேட்டி
ரவி மோகன் - ஆர்த்தி
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டதால், அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கடுப்பான ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் தன் குழந்தைகள் குறித்தும் அவரது திருமணம் வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
பரபரப்பு பேட்டி
இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், கெனிஷா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " எனக்கு இரண்டு சோல் மேட்ஸ் உள்ளன. அதில் ஒருவர் பெண் இன்னொரு சோல் மேட் என்னுடைய கண்களை திறந்திருக்கிறார். பாதுகாப்பு, அக்கறை என அனைத்தையும் எனக்கு கொடுக்கிறார்.
எப்போது நான் இறப்பேன் என்று எனக்கே தெரியாது எனவே இருக்கும் வரை என்ஜாய் செய்ய வேண்டும். அடுத்தவரிடம் நம் மென்ட்டல் ஹெல்த்தை கொடுத்தால் நாஸ்தி ஆகிவிடும். நான் அதனை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.