காணாமல் போன 26 வயது பாடகி! உடல் சிதைந்து பிணமாக மீட்கப்பட்ட சோகம்
ஹரியானாவை சேர்ந்த 26 வயதான பாடகி சங்கீதா 11 ஆம் தேதியில் இருந்து தங்கள் மகளை காணாமல் போனதாக அவரின் பெற்றோர்கள் போலிசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து சங்கீதா கடத்தப்பட்டதாக போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஹரியானாவில் உள்ள பைரன் என்ற கிராமத்தில் ஒரு பெண்ணில் உடல் சிதைந்த நிலையில் இருப்பதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலிசார் சென்றுள்ளார். அந்த உடல் பாடகி சங்கீதா உடல் தான் என்று உறுதி செய்த போலிசார் சங்கீதாவை யார் கொலை செய்தார்கள் என்று விசாரித்தனர்.
மேஹம் பகுதியை சேர்ந்த இருவரை போலிசார் கைது செய்து விசாரித்ததில் இருவரும் சங்கீதாவை கடத்தி திட்டுமிட்டு கொலை செய்ததாகவும் விசாரணையை உண்மையை கூறியுள்ளனர்.
கழுத்தை நெரித்து கொன்ற அங்கேயே உடலையும் வீசியுள்ளனர். இதுகுறித்து எதற்காக கொலை செய்தார்கள் என்று இருவரிடமும் தீவிரமாக விசாரித்து பரிசோதனை முடிந்ததும் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கபட்டது.