20000-க்கும் மேற்பட்ட பாடல் பாடிய பாடகி சுஜாதாவுக்கு இப்படியொரு பிரச்சனையா?

Tamil Singers Cinema Update Cinema News
By Edward Apr 03, 2026 10:00 AM GMT
Report

பாடகி சுஜாதா

தமிழ், மலையாள, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் தான் பாடகி சுஜாதா. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் பாடிய சுஜாதா, இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

20000-க்கும் மேற்பட்ட பாடல் பாடிய பாடகி சுஜாதாவுக்கு இப்படியொரு பிரச்சனையா? | Singer Sujatha Mohan Opens Up Emotional Her Issues

அவருக்கென தனி அடையாளம் பெற்ற சுஜாதா பல மாநில விருதுகள் வாங்கியிருந்தாலும் இன்னும் தேசிய விருது கிடைக்காமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஜாதாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டபோது மேடைக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

20000-க்கும் மேற்பட்ட பாடல் பாடிய பாடகி சுஜாதாவுக்கு இப்படியொரு பிரச்சனையா? | Singer Sujatha Mohan Opens Up Emotional Her Issues

அதில், எனக்கு தொண்டையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதனால் என்னால் முன்பு போல் பாடமுடியவில்லை. முன்பெல்லாம் நான் எங்கேயாவது பாடாமல் இருந்த நாளே கிடையாது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.