பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்!! பாடகி ஸ்வாகதா எடுத்த அதிரடி முடிவு...

Sexual harassment Gossip Today Tamil Actress Tamil Singers
By Jai May 14, 2026 02:30 AM GMT
Report

பாடகி ஸ்வாகதா

பிரபல இசையமைப்பாளர் 7 வருடங்களுக்கு முன் ஸ்டூடியோவில் எனக்கு பாலியல் தொந்தரவு தந்தார் என்றும் அங்கு நடந்த அனைத்தும் ரகசிய கேமராவிலும் பதிவு செய்யப்பட்டது, யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கூறி மிரட்டியதாக கூறி பாடகி ஸ்வாகதா பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது ஒருபக்கம் இருக்கையில் பாடகி ஸ்வாகதாவிடன் யார் அந்த இசையமைப்பாளர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்!! பாடகி ஸ்வாகதா எடுத்த அதிரடி முடிவு... | Singer Swagatha Says She Is Ready To Fight Against

மகிஷாசூரமர்த்தினியாக மாறப்போகிறேன்

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவில், நான் இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஏற்பட்ட அந்த மோசமான சம்பவத்திலிருந்து மீண்டு வரவும் என்னை குணப்படுத்தவும் பல போராட்டங்கள், பல முயற்சிகள் செய்து வந்தேன்.

தற்போது முழுமையாக தேவியின் அருளால் போராட வேண்டிய பலத்தை பெற்றுள்ளேன். இதற்கு மேல் பொறுமையாக இருக்கப்போவதில்லை.

எனக்கு எதிராக கொடுமைகள் கொடுத்தவருக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சிகளை தொடங்கவுள்ளேன். இந்த தர்மயுத்தத்தை நான் மகிஷாசூரமர்த்தனம் என்று சொல்ல விரும்புகிறேன்.

நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று காட்டமாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் பாடகி ஸ்வாகதா.