சைக்கோ கணவருடன் விவாகரத்து!! கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி..

Gautami Gossip Today
By Edward Dec 08, 2022 11:19 AM GMT
Report

மலையாள சினிமாவில் பாடகியாக இருந்து தமிழில் குக்கூ படத்தில் கொடையில் மழைப்போல என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து சொப்பன சுந்தரி நான் தானே உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தார்.

சைக்கோ கணவருடன் விவாகரத்து!! கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி.. | Singer Vaikom Vijayalakshmi Opensup About Divorce

விவாகரத்து

கடந்த 2016ல் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயம் வரை சென்று மணமகன் ஏராளமான நிபந்தனைகள் வைத்ததால் திருமணம் வேண்டாம் என்று நிறுத்தியிருக்கிறார் வைக்கம் விஜயலட்சுமி. அதன்பின் 2018ல் அனூப் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

ஆரம்பத்தில் நன்றாக சென்ற வாழ்க்கையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதன்பின் தான் சினிமாவில் பாடல்கள் பாட வாய்ப்பு பெற்று பாடகியாக ஜொலித்து வருகிறார். சமீபத்தில் தனியார் ஊடகத்தில் நடந்த ஒரு நேரலையில் நடிகை கெளதமி பேட்டி கண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.

சைக்கோ கணவருடன் விவாகரத்து!! கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி.. | Singer Vaikom Vijayalakshmi Opensup About Divorce

சைக்கோ கணவர்

அதில், என்னை திருமணம் செய்தவர் ஒரு சேடிஸ்ட் என்பது தெரியவந்தது. எதற்கெடுத்தாலும் குறையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுவதே வேலையாக வைத்திருந்தார். என்னை மட்டும் நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதன்பின் நான் பாடல் பாடுவதில் பல நிபந்தனைகளை வைத்தார்.

என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் அதை சமாளிக்க முடியாமல் விவாகரத்து செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய முக்கியம் சந்தோஷமும் சங்கீதமும் தான். அதை சமாளித்து வாழ வேண்டியத்தேவையில்லை.

வலிக்கொடுக்கும் ஒரு பல் போகப்போக அதிகமாகிவிட்டால், அதை பிடிங்கி எடுப்போம் இல்லையா. அதுபோலத்தான் அவரை தூக்கிப்போட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த பதிலால் நடிகை கெளதமி மிரண்டு போய் வைக்கம் விஜயலட்சுமியை பாராட்டி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.