இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. அட என்ன கொண்டாட்டம்
பிரகதி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜுனியர் 3வது சீசனில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்காவில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார்.
அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், கண்ணே கலைமானே போன்ற படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தாரை தப்பட்டை படத்தில் சிறிய ரோலில் பிரகதி நடித்திருந்தார். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுடன் இணைந்து அடடா என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.
சுற்றுலா
இந்நிலையில் பிரகதி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,