மனோஜ் செய்த தவறால் வீட்டை காலி பண்ணும் அண்ணாமலை குடும்பம்!! சூழ்ச்சி செய்த சிந்தாமணி..

Viral Video Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Jai May 03, 2026 10:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று டிஆர்பியில் டாப் இடங்களை பிடித்து வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. கடந்த வாரங்களாக சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்று வருகிறது.

மனோஜ் செய்த தவறால் வீட்டை காலி பண்ணும் அண்ணாமலை குடும்பம்!! சூழ்ச்சி செய்த சிந்தாமணி.. | Siragadikka Aasai Family Out From Her House

அந்தவகையில், மனோஜ் தன்னுடைய அப்பாவின் கையெழுத்தை போட்டு வீட்டினை அடமாடம் வைத்த விவகாரத்தில் 48 லட்சம் ரூபாய் கொடுத்தால் வீடு, இல்லையென்றால் வீட்டை ஜப்தி செய்துவிடுவோம் என்று மிரட்டி சென்றார்.

அதில் முத்து, மீனா ரூ. 10 லட்சத்தை கொடுத்து அடைக்க, சிந்தாமணியின் சூழ்ச்சியால் மனோஜ் கைது செய்யப்படுகிறார். இதனையடுத்து ரோகினி 5 லட்சம் கொடுத்து மனோஜை வெளியில் எடுக்க, சிந்தாமணி மற்றுமொரு சூழ்ச்சியை செய்துள்ளார்.

மனோஜ் செய்த தவறால் வீட்டை காலி பண்ணும் அண்ணாமலை குடும்பம்!! சூழ்ச்சி செய்த சிந்தாமணி.. | Siragadikka Aasai Family Out From Her House

உடனே ரூ. 38 லட்சம் கொடுக்க வேண்டும் என்று பைனான்ஸியரிடம் நோட்டீஸ் அனுப்ப சொல்கிறார். இந்த அவமானத்தில் இருந்து தப்பி அண்ணாமலை குடும்பம் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.

இனி வரும் நாட்களில் அண்ணாமலை குடும்பம் எங்கு தங்குவார்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? என எப்படி கதை நகரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போம்..