சிறகடிக்க ஆசை சீரியல் மீனா யார்? ஆடிஷன் எப்படி நடந்தது தெரியுமா?

Serials Tamil TV Serials Tamil Actress Actress Siragadikka Aasai
By Edward Apr 01, 2025 02:30 PM GMT
Report

கோமதி பிரியா

சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் மீனா ரோல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மீனாவாக நடிகை கோமதி பிரியா பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா யார்? ஆடிஷன் எப்படி நடந்தது தெரியுமா? | Siragadikka Aasai Heroine Meena How Did Audition

சிறகடிக்க ஆசை

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எனோட உண்மையான பெயர் கோமதி பிரியா, என்னோட சொந்த ஊர் மதுரை. இன்ஜினியரிங் டிகிரியில் ஈசி டிபார்ட்மெண்ட். எனக்கு ஒரு தம்பி, தங்கை இருக்காங்க. 12ஆம் வகுப்பு வரை மதுரையில் படிச்சு, சென்னைல டிகிரி படிச்சேன். காலேஜ்ல நான் நல்லா படிப்பேன், என் குடும்பம் லோயர் மிடில் கிளாஸ். ஸ்காலர்ஷிப்ல படிச்சு, ஒரு கம்பெனில 8, 9 மாசம் வேலை செஞ்சப்பின் வேலையை விட்டுட்டு நடிக்க வந்தேன்.

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா யார்? ஆடிஷன் எப்படி நடந்தது தெரியுமா? | Siragadikka Aasai Heroine Meena How Did Audition

என்னோட முதல் ப்ராபர் ப்ராஜெக்ட் ஓவியா சீரியல். இயக்குநர் பாலா சாரோட வர்மா படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணிருப்பேன், முதல்ல ஆக்டிங் நமக்கு அந்தளவுக்கு வராது, எனக்கு ஃபேமிலி பேக்ரவுண்ட்ல இல்லாததால படிக்குற ஸ்டூடண்ட் தான். எனக்கு ஆடிஷனே ஃபில்டர் பண்ணி எடுத்தது.

6, 7 டைப் ஆடிஷன் வச்சு எடுத்தாங்க, இந்த பொண்ணு நல்லா இருக்குது, ஏதாவது சொல்லிக்கொடுத்தா பண்ணும்னு நம்பிக்கைலதான் எடுத்தாங்க. முதல்ல நிறைய கஷ்டப்பட்டேன், நடுங்குவேன், பயப்படுவேன். இப்போ போகப்போக பிக் அப் ஆகிட்டேன்.

எங்க வீட்ல நான் சீரியல் பண்றது யாருகிட்டயும் சொல்லல, அந்த பிரமோ பார்த்து இந்த பொண்ணு உன்னமாதிரி இருக்குன்னு சொன்னதும் நான் தான் அதுன்னு சொன்னேன். எனக்கு எப்படி வாய்ப்பு கிடச்சதுன்னு இன்னமும் நிறைய பேரு என்னை ஷாக்கா தான் பார்ப்பாங்க என்று கோமதி பிரியா தெரிவித்துள்ளார்.