சித்ரா தற்கொலையின் சம்பந்தப்பட்டு இருக்கும் மூன்றாவது நபர் யார்? ஹேமந்த் மறைப்பது இது தானா!
சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ல் ஹேட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தற்கொலை சம்பந்தமாக பலரிடமிருந்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.
சித்ராவின் கணவர் ஹேமந்த், விசாரணையின் போது ஹேமந்த் தெளிவான பதில் எதையும் கொடுக்கவில்லை என்கின்றனர் காவல்துறையினர்.
ஏனென்றால் முதலில் சித்ரா குளிக்க சென்றதால் நான் வெளியே சென்றேன் என்று கூறிய ஹேமந்த் பிறகு, ஒரு டாக்குமென்ட் எடுப்பதற்காக வெளியே சென்றேன் என்று கூறியிருப்பது வினோதமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சித்ராவை எதற்காக ஹேமந்த், ரூமில் விட்டுவிட்டு வெளியே சென்றார் என்பது இன்று வரை தெரியவில்லை.
மேலும் ஹேமந்த் வெளியே சென்றிருந்த போது, வேறு யாராவது ஒருவர் சித்ராவை கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அந்த நபர் சித்ராவிற்கு மிகவும் தெரிந்த நண்பராகவோ, அரசியல் புள்ளிகளில் யாராவதாகவோ இருக்கலாம் என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எனவே, இந்த தகவல் மூலம் சித்ராவின் கொலை வழக்கில் மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது