நீ ரொம்ப மோசம்யா, பெண்களை எல்லாம் கவர்ந்து வச்சிருக்க!! இயக்குநரை கலாய்த்த சிவாஜி கணேசன்..
பாக்யராஜ்
1983ல் தமிழ் காதல் நகைச்சுவை படமான இயக்குநர் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானை முடிச்சு. பரிமளா என்ற குறும்புக்கார கிராமத்துப்பெண், கிராமத்தில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவரை காதலிப்பதை மையப்படுத்தி, அவரை திருமணம் செய்வது போன்ற கதைக்களத்துடன் வெளியான படம் தான். இப்படத்தினை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கிண்டலாக பாராட்டியதாக பாக்யராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் தாவணிக்கனவுகள் கதையை எழுதி முடித்தப்பின், அந்த கதையில் ஒரு ஓய்வு பெற்ற மிலிட்டரி ஆபிசர் கேரக்டர் இடம் பெற்றிருந்தது. அந்த ரோலில் நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் வாழ்வது போல் இருக்கும். அந்த ரோலில் நடிகர் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
இதன்பின் அவரிடம் கதையை சொல்ல சென்றபோது, என்னை பார்த்தவுடன் அவர் வா பாக்கி என்று கூறியதும் ஆச்சரியப்பட்டு, கதையை விவரித்தேன். அவருக்கும் கதை பிடிக்க, படம் செய்யலாம் என்று ஒத்துக்கொண்டார்.
என்னை பார்த்து, பாக்கி நீ ரொம்ப மோசம் என்று சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே நான் அவரிடம் இப்போதுதான் நான் உங்களை முதன்முதலாக பார்க்கிறே, பார்க்கும் போதே இப்படி சொல்கிறீர்கள் என்றேன்.
கலாய்த்த சிவாஜி
ஆமாம், நீ எங்கள் வீட்டுப்பெண்களை எல்லாம் கெடுத்து வைத்திருக்கிறாய் என்று சொன்னார். இதன்பின் என்னிடம் அவர், ஒருநாள் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்தேன், அப்போது விட்டில் உள்ள பெண்கள் அனைவரும் முந்தானை முடிச்சு படத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
சரி வீட்டில்தான் யாருமில்லையே என்று சொல்லி கீழே அமர்ந்து இருந்தபோது, சில நேரத்திற்கு பின் வந்தவர்களிடம் எங்கே சென்று இருந்தீர்கள் என்று கேட்க, முந்தானை முடிச்சு என்று சொன்னதோடு படம் ஆபாசபடம் போல் இருப்பதாக சொல்லி முகம் சுளித்தார்கள்.
ஆனால் ஒருநாள் இடைவெளியில்
மீண்டும் அந்தபடத்தை அவர்கள் பார்க்கச்
சென்றப்பின் சிவாஜி அவர்களை கலாய்த்து
தள்ளியிருக்கிறார். இதனால் தான் என்னை சிவாஜி
அவர்கள் அப்படி சொல்லி இருக்கிறார் என்று
பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.