சாப்பாடு எனக்கு மட்டும்தான்..நீ வெளில சாப்பிடு!! இயக்குநரை கடுமையாக திட்டிய நடிகர் திலகம்..
நடிகர் திலகம்
நடிகர் திலகன் சிவாஜி கணேசனுடன் பணியாற்றி அனுபவங்கள் பற்றி பலரும் பேட்டிகளில் பகிர்ந்து வருவார்கள். அந்தவகையில் தான் கதை கூறி அவரிடம் திட்டுவாங்கிய அனுபவத்தை இயக்குநர் பி வாசு கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகர்களை இயக்கிய பி வாசு கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற படத்தை இயக்கி அதே படத்தை தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் ரஜினிகாந்தை வைத்து எடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தும் 800 நாட்கள் படத்தை ஓட வைத்தும் சாதனை படைத்தார்.

நீ வெளில சாப்பிடு
இதுகுறித்து அவர் பேசுகையில், இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க கதை சொல்லப்போனேன். அப்போது அவர் சாப்பிட உட்கார்ந்திருந்தார். மதிய சாப்பாட்டு நேரத்தில் தான் என்னை வர சொல்லியிருந்தார்.
அவர் சாப்பிடும்போது எனக்கு மட்டும் தான் சாப்பாடு இருக்கிறது என்று சொன்னதும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் இது என் ஷூட்டிங் அதனால் எனக்கு மட்டும் தான் சாப்பாடு வந்தது, நீ போய் வெளியில் சாப்பிட்டு வா என்று சொன்னதும் நான் எனக்கு சாப்பாடு வேண்டாம், கதை சொல்லிவிட்டு சாப்பிடுகிறேன் என்றேன்.

பின் உட்கார்ந்து சாப்பிட்டு முடிச்சுச்சப்பின் ஒரு லுங்கி கட்டிக்கொண்டு, ஒரு பனியன் போட்டுக்கொண்டு வந்தார். உட்கார்ந்த உடனே அவரிடம் நான் கதை சொல்லப்போகும் போது டிவி ஒன்று வருகிறது. அதன்பின் நான் கதை சொல்லத் தொடங்கும்போது அவர் டிவி பார்த்துக்கொண்டிருந்தார், அதில், கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது.
டிவி சவுண்ட் வந்ததால் என்னால் கதை சொல்ல முடியவில்லை, ஆனாலும் முதல் சீன் என்று ஆரம்பிக்கும்போது என்னடா டிவி வேலை செய்யவில்லையா என்று கேட்டார். உடனே சிகரெட் எடுத்து கையில் வைத்து தட்டினார். உடனே நான், மன்னித்துவிடுங்கள் என்றது, ஏன் என்றார்.
நீங்க சிகரெட் பிடிக்கிறீங்க, டிவி பாக்குறீங்க, நான் கதை சொல்லும்போது உங்கள் கவனம் அங்கு தான் போகும், கதையில் என்று சொன்னேன். அதைக்கேட்டவர், செம கோபத்தில், என்ன சொன்ன, யாரை பார்த்துக் கேட்கிற என்று கடுமையாக திட்டிவிட்டார் என்று இயக்குநர் பி வாசு தெரிவித்துள்ளார்.