நான் யாருடனும் போட்டிபோட விரும்பல!! ஜனநாயகன் பற்றி சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இன்று ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ்யான படம் தான் பராசக்தி. பல போராட்டங்களுக்கு பின் நேற்று சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் புக்கிங் செய்த சில மணிநேரத்தில் பல திரையங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆனாது.

நான் யாருடனும் போட்டி
இந்நிலையில், நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் அளிக்காமல் வழக்கு 21 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் ஆவது எப்போது என்ற கேள்வி எழுந்து வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் ஜனநாயகன் படம் தள்ளிப்போனது பற்றி தன்னுடைய மனநிலை என்ன என்பதை பகிர்ந்துள்ளார்.

அதில், ஜனநாயகன் படம் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று. படம் தள்ளிப்போகும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை, இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கடந்த 15 நாட்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது.
நான் யாருடனும் போட்டிப்போட விடும்பவில்லை. இந்த திரையுலகில் அனைவருக்கும் இடம் இருக்கிறது, நான் போட்டிப்போட நினைத்திருந்தால் ஒரு தடகள வீரராகவோ, குத்துச் சண்டை வீரராகவோ மாறியிருப்பேன் என்று சிவகார்த்திகேயன் ஓபனாக பேசியிருக்கிறார்.