சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். கடந்த சில வாரங்களாக இறுது சுற்றுக்கு தேர்வாகப்போகும் அந்த 6 பேருக்கான தேடல் போட்டி நடைபெற்று வந்தது.
அப்படி சிறப்பாக பாடிய, ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி என்ற 6 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. மேலும் ஜி தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் Grand Finale Live நடக்கவுள்ளது.
சிறப்பு விருந்தினர்
இந்நிலையில், இறுதி சுற்று போட்டி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு யார் சிறப்பு விருந்தினராக வருவார்கள் என்ற ஆவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சிக்கு முன்னணி மாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் மாஸ் எண்ட்ரி கொடுப்பது டபுள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.