என்னடா பித்தலாட்டம் இது.. பீஸ்ட் அரபிக் குத்து சிவகார்த்திகேயன் எழுதலையா?

Sivakarthikeyan Anirudh Ravichander Beast
By Parthiban.A May 01, 2022 01:59 PM GMT
Report

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்து இருந்த அந்த பாடல் youtubeல் 359 மில்லியன் பார்வைகளை பெற்று இருக்கிறது அது. கோலிவுட் பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் பிரபலங்கள் வரை அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

அரபிக் குத்து பாட்டுக்கு சிவகார்த்திகேயன் தான் வரிகளை எழுதினார் என சொல்லப்பட்டது. அதனால் ஹலமதி ஹபீபோ என்றால் என்ன அர்த்தம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அந்த பாடலில் இடையில் வரும் தமிழ் வரிகளை மட்டுமே எழுதிஇருக்கிறாராம். முதலிலேயே அனிருத் அனுப்பிய பாடலில் சில மாற்றங்களை மட்டுமே அவர் செய்து இருக்கிறார்.

இதென்னடா பித்தலாட்டமா இருக்கும்.. அப்போ சிவகார்த்திகேயன் அந்த பாடலை எழுதலையா என அனைவரும் கேட்டு வருகின்றனர்.