100 கோடிக்கு ஆசைப்பட்டு நடுத்தெருவில் பிரபல விநியோகஸ்தர்!! கோடியை இறைத்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் மிகக்குறைவாக ஆண்டுகள் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். எங்க வீட்டு பிள்ளை என்று பாசமோடு அழைக்கும் சிவகார்த்திகேயன், டாக்டர், டான் படத்தால் 100 வசூல் நாயகனாக திகழ்ந்து வருகிறார்.
பிரின்ஸ் தோல்வி
பல ஆண்டுகளுக்கு பின் தான்பட்ட கடன்களை அடைக்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியும் அதற்கேற்ப வசூல் சாதனையை கொடுத்து உழைத்திருந்தார் சிவகார்த்திகேயன். அது முடிந்த சில ஆண்டுகளிலே வேறொரு பிரச்சனையையும் இந்த ஆண்டு சந்திருந்தார்.

அந்தவகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கு, தமிழ் படமாக வெளியான பிரின்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. பட்ஜெட்டைவிட வசூல் மிகப்பெரிய குறைவாக பெற்று சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
20 கோடி
இப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர் மதுரை அன்பு தான் ரிலீஸ் செய்துள்ளார். மொத்தம் 20 கோடிக்கு வாங்கியதால் வெறும் 8 கோடிக்கும் மேல் தான் ஷேர் வந்துள்ளதாம். 12 கோடி அளவில் நஷ்டத்தை மதுரை அன்பு சந்துள்ளார்.
இதனை சரிசெய்ய சிவகார்த்திகேயன் 3 கோடி அளவில் பணத்தை கொடுத்துள்ளார். பட தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களுடன் இணைந்து சுமார் 6 கோடியை மதுரை அன்புசெழியனுக்கு கொடுத்துள்ளாராம். ஏற்கனவே தான் பட்ட கடன் கஷ்டத்தை அறிந்து தான் இந்த முடிவை சிவகார்த்திகேயன் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.