சிவகார்த்திகேயனுக்கே இந்த நிலைமையா? பிரின்ஸ்-ஐ தொடர்ந்து மாவீரன் படத்திற்கு வந்த பெரிய அடி..

Sivakumar Maaveeran Prince (2022)
By Edward Nov 04, 2022 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் கோடியில் சம்பளம் வாங்கும் வளர்ந்து வரும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் போன்ற 100 கோடி வசூல் படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

அதன்மூலம் மாவீரன், பிரின்ஸ், அயலான் போன்ற படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தீபாவளி அன்று இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றும் கதையே இல்லை என்று சிவகார்த்திகேயனை படுபயங்கரமாக கலாய்த்து ட்ரோல் செய்து வந்தனர்.

இதன்பின் மாவீரன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே இப்படம் ஆரம்பித்த முதல் வாரமே பினான்ஸியல் பிரச்சனையால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் அஸ்வின் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி யாருக்கு என்ன கருத்து வேறுபாடு என்ற தகவல் வெளியாகவில்லை.

பிரின்ஸ் தோல்வியால் மனமுடைந்த சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு நிலையா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். ஆனால் மழைக்காரணமாகவே படப்பிடிப்பினை நிறுத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டு வருகிறது.

Gallery