கோடியில் புரள சிவகார்த்திகேயன் எடுத்த புது ரூட்? வளர்த்த கிடா மார்பில் இப்படி முட்டுதே..
சின்னத்திரை தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சிறு வாய்ப்பு மூலம் வெள்ளித்திரையில் 3 படத்தின் மூலம் அறிமுகமாகியவர் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன்.
தன் முழு திறமனையை பயன்படுத்தி தன்னைத்தானே மெருகேற்றி, டாக்டர், டான் போன்ற 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படத்தினை கொடுத்து முன்னணி இடத்தினை பிடித்தார். தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து சைட் பிஸ்மஸ் செய்யும் சிவகார்த்திகேயன் அதிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
தற்போது புது வழியை போட்டு காசு சம்பாதிக்க திட்டமிட்டு வருகிறார். ஒரு படத்தில் நடித்த இயக்குனர்களுடன் 2 படங்களுக்கு மேல் இதுவரை நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். அதாவது, புதுமுக இயக்குனர்கள் வெற்றி கொடுத்தாலும் அடுத்த படங்களில் இணைவதே கஷ்டம்.
அதற்கு காரணம் அடுத்த படத்தில் இயக்குனர் சம்பளத்தை அதிகமாக கேட்பது தானாம். அதற்காக பாண்டியராஜ் கதையை கூறி காஷ்ஷீட் கேட்டும் கொடுக்க தயக்க காட்டுகிறாராம் சிவகார்த்திகேயன்.
வளர்த்து விட்ட கிடா மார்பில் முட்டுதே என்பதற்கேற்ப சிவகார்த்திகேயன் இந்த செயல் கூட பல இயக்குனர்களுக்கு வெறுப்பை சம்பாதிக்க தூண்டியுள்ளதாம்.