மதராஸி மாபெரும் வெற்றி.. சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் கூட்டணி?

Sivakarthikeyan Tamil Cinema Tamil Actors
By Bhavya Sep 09, 2025 07:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி படம் செம வசூல் வேட்டை நடத்திய படமாக உள்ளது.

அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மதராஸி மாபெரும் வெற்றி.. சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் கூட்டணி? | Sivakarthikeyan Next Movie Details

மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தல் பராசக்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருடன் கூட்டணி? 

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மதராஸி மாபெரும் வெற்றி.. சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் கூட்டணி? | Sivakarthikeyan Next Movie Details