கமல், தனுஷ் மட்டுமல்ல! இந்த லிஸ்ட்டில் சிவகார்த்தியும் அப்படித்தானாம்..

simbu dhanush sivakarthikeyan kamalhaasan lyricrist
By Edward Feb 09, 2022 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நட்சத்திரங்கள் ஆரம்பத்தில் நடிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து சிறு பட்ஜெட் படங்களில் நடிப்பார்கள். அதன்பின் தங்களின் மார்க்கெட் எகிற ஆரம்பித்து காசு சம்பாதித்தால் போது தயாரிப்பு என ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் நடிகராக இருந்து பின் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியல், சிங்கர் என பல பரிமானங்களை உள்ளடக்கியவராக இருந்து வருகிறார்.

அவருக்கு அடுத்து அவர் இடத்தினை பிடித்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் 3 படத்தில் வைதிஸ்கொலவரி பாடலை பாடி பாடகராக அறிமுகமாகி பின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என கொடிக்கட்டி பறந்து வருகிறார். அவரைபோல் நடிகர் சிம்புவும் பாடலாசிரியர் பாடகர் என்று இருந்து வருகிறார்.

தற்போது அவர்களின் இடத்தை பிடிப்பது போன்று மாறி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றப்பின் தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என்று தனித்துவத்தை காட்டி சினிமாவில் பல கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்.

பாடலாசிரியராக எழுதும் பாடலில் வாங்கும் சம்பளத்தினை மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுத்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். பீஸ்ட் படத்தில் வாங்கும் தொகையை கூட கொடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.