கோடியில் புரளும் சிவகார்த்திகேயன்! எல்லாம் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் இடம் தான்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடித்து 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்திற்கு பிறகு டான் படத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்துள்ளார்.
நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அப்போது படத்தில் நான் கல்லூரி மற்றும் பள்ளி மாணவனாக நடித்திருக்கிறேன். பள்ளி மாணவனாக நடிக்க 8 கிலோ குறைத்திருக்கிறேன்.
என்னை கல்லூரியில் நான் என்று கூப்பிட்ட்டதால் படத்திற்கு டான் என்று பெயரிட்டோம். இதை தொடர்ந்து 100 வசூலித்ததால் என் சம்பளத்தை நான் உயர்த்தவில்லை. எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் முடிவு தான் அது என்று கூறியுள்ளார்.
எந்த தயாரிப்பாளர்கள் இத்தனை கோடி கேட்காமல் சம்பளத்தை தர எப்படி முடிவு செய்வார்கள்.
கடந்த படத்தின் வசூல் மற்றும் நடிகர்களின் சம்பளத்தை வைத்து தயாரிப்பாளர்கள் ஒரு தொகை கூற அதைவிட நடிகர்கள் தான் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்கள் என்று சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.