இமானின் முன்னாள் மனைவியை டார்ச்சர் செய்த சிவகார்த்திகேயன்.. தொழிலை தாண்டி இப்படியொரு உறவாம்...
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய உழைப்பால் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் அயலான் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கவுள்ளதால், அவரின் இடத்தினை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
கோலிவுட்டின் க்ளீன் பாய் என்ற பெயரை சிவகார்த்திகேயன் பெற்றிந்தார். சமீபத்தில் இசையமைபாளர் டி இமான் உடைத்திருக்கிறார். இனி சிவகார்த்திகேயனுடன் இணையப்போவதில்லை என்றும் எனக்கு செய்த துரோகம் பற்றியும் பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதுகுறித்து சினிமா விமர்சகர்கள் சிவகார்த்திகேயன் பற்றிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில் டி இமான் மற்றும் அவரது முதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், நான் இமான் அண்ணன் குடுமத்துடன் நெருங்கி பழகுகிறேன் என்றும் அவரை நான் அண்ணா, அவரது மனைவியை அண்ணி என்றும் தான் அழைப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இமான் அண்ணாவுக்கு கால் பண்ணி பேசுகிறேனோ இல்லையோ அண்ணிக்கு தான் கால் செய்து டார்ச்சர் செய்து கொண்டே இருப்பேன், ஏன் கொழுந்தனாரே இப்படி பண்ணுறீங்க என்று அவரும் பதிலுக்கு சொல்லுவார். இது தொழிலை மீறிய ஒரு உறவு என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.